விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக

M K Stalin DMK Viluppuram
By Karthikraja Jun 11, 2024 08:19 AM GMT
Report


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

anniyur siva

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுவை திரும்ப பெறுவதற்க்கான கடைசி நாள் ஜூன் 21ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 நடைபெறும் என்று அறிவித்துள்ளது. +

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம் - பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம் - பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி

அன்னியூர் சிவா

தற்போது அங்கு திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அன்னியூர் சிவா விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் பொறுப்பில் உள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.