அடேங்கப்பா... மூன்றே நாளில் மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘விக்ரம்’ - ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம்

Kamal Haasan Anirudh Ravichander Vikram Movie
By Nandhini Jun 06, 2022 11:34 AM GMT
Report

நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியான மூன்றே நாளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விக்ரம் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தான் விக்ரம். இப்படத்தில் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘விக்ரம்’ படம் கடந்த ஜுன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே இப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

அடேங்கப்பா... மூன்றே நாளில் மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘விக்ரம்’ - ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம் | Vikram Movie Kamal Haasan Collection Record

வசூல் சாதனை

விக்ரம் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது, விக்ரம் படம் வெளியான மூன்றே நாளில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட், அஜீத் நடித்த வலிமை ஆகியவை படங்களின் வசூல் செய்த சாதனையை ஆண்டவரின் ‘விக்ரம்’ படம் முறியடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.