பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து விலகும் விஜய் சேதுபதி?அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விஜய் சேதுபதி விலக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 8
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.
இந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்தாண்டு அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது.இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.இதில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் 8வது சீசன் நிறைவு விழா நடைபெற்றது.இதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விஜய் சேதுபதி விலக உள்ளதாகத் தகவல் வெளியானது.
விஜய் சேதுபதி
இதனிடையே, நேற்று நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எப்படி வந்தார் என்பது குறித்த வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.அதில், ஆட்டம் இன்னும் முடியவில்லை…உங்கள் எல்லோரையும் அடுத்த வருஷம் சந்திக்கிறேன்' என விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
அதன்படி அடுத்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.மேலும் விஜய் சேதுபதி விலக உள்ள தகவல் என்பது வதந்தி என்று தெரியவந்துள்ளது.