40 வயது ஆனா என்ன..எனக்கு குழந்தை வேணும் -ராபர்ட் மாஸ்டரிடம் சண்டையிட்ட நடிகை வனிதா!
ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஜோடியாக நடித்திருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியின் முதல் மகள் வனிதா. இவர் சந்திரலேகா திரைபடத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து மாணிக்கம், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் அனைத்தும் தோல்வியைச் சந்தித்தது.
இதனையடுத்து நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா குழந்தைகள் உள்ளனர். இரண்டாவதாக ராஜன் ஆனந்தை திருமணம் செய்து பின் அவரையும் விவாகரத்து செய்தார்.
குடும்ப பிரச்சனை காரணமாகத் தனியாக வசித்து வந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் மூலம் ரீஎண்டரி கொடுத்தார்.அதன்பிறகு மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
டீசர்
இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஜோடியாக நடித்திருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் ,40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும் என்று வனிதா அடம்பிடிக்கிறார் .
அதற்கு ராபர் மாஸ்டரோ , 40 வயது வந்தாலே பாட்டி, பாட்டி வயதில் உனக்கு குழந்தை வேணுமா என்று நோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்கு வாதம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் வனிதா, மெத்தையில் படுத்துக்கொண்டு, ராபர்ட் மாஸ்டரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் காட்சிகள் செய்துள்ளார்.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வைரலாகி வருகிறது.