காமராஜர் பிறந்தநாளில் இரவு பாடசாலை திட்டம் - விஜயின் அடுத்த அதிரடி மூவ்!
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு, நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. அதில் குருதி கொடை, விழியகம் எனப்படும் கண் தான திட்டம், குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கும் திட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இரவு பாடசாலைத் திட்டங்களை தொடங்கவும், அதனை காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி அன்று இத்திட்டத்தை ஆரம்பிக்கவும் நிர்வாகிகளை விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரவு பாடசாலை திட்டம்
இந்நிலையில், இந்த இரவு பாடசாலை திட்டத்திற்கான இடம் மற்றும் இதன் ஏற்பாடுகள் அனைத்தையும் விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அதற்கான வாடகைகளும் அந்த இயக்கமே வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்பு முடித்த ஆசியரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் இரவு பாட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் நடிப்பிற்கு ஓய்வு கொடுக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியன.