அரசியலுக்கு வந்தால் நடிக்கமாட்டேன் - களத்தில் இறங்கும் நடிகர் விஜய்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
அரசியலில் இறங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் வருகை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் கொடுத்து நடிகர் விஜய் கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆதரவு
அதன் பின், பேசிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அரசியலில் இறங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறினார்; முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என விஜய் கூறினார். அவரது, அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம்.
அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம். விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். அரசியலைப் பொருத்தவரை அஜித், ரஜினி ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.