இது மட்டும் வேண்டாம் நண்பா .. கடிவாளம் போட்ட தளபதி விஜய்.. அடுத்து அரசியல் பயணமா ?
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
ரசிகர்கள் சந்திப்பு
இந்த நிர்வாகிகளை சென்னை புறந்கர் பனையூரில் சந்தித்த விஜய் சில முக்கியமான கண்டின்களை போட்டுள்ளாரம் , அது குறித்து பார்க்கலாம்
விஜய் மக்கள் இயக்கத்தில் அதிக அளவி இளைஞர்களை சேர்க்க வேண்டும் த்த தான முகாம்களை கண்டிப்பாக அதிக அளவில் நடத்த வேண்டும்.
அதன் மூலம் இயக்கத்தை மக்கள் மத்தியில் நன்றாக கொண்டு செல்ல முடியும்.
ரூல்ஸ் போட்ட விஜய்
பேனர் வைப்பது மட்டும் போதும், அதில் பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம்.
ஏழை எளிய மக்கள் மற்றும் தேவையுள்ள பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிந்த அளவிற்கு தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள்.
விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடின்றி எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், என்று கூறியுள்ளாராம்.
விஜய் அரசியல்
கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றது, ஆகவே இந்த கூட்டத்தில் அரசியல் குறித்து பேசியிருக்கலாம் என்றும் இளைஞர்களை மக்கள் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என கூறியதால் அடுத்து தளபதி விஜய் அரசியல் வியூகத்தை வகுத்து விட்டார் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதே சமயம் உதயநிதி அமைச்சராக அமர உள்ள நிலையில் தனது ரசிகர்களை விஜய் அவசரமாக கூட்டி உள்ளது அரசியல் களத்திலும், சினிமா வட்டாரத்திலும் ஊற்று நோக்கப்படுகின்றது.