நடிகர் விஜயின் கல்வி விருது; விழாவில் ஏற்பட்ட குழப்பங்கள் - என்ன நடந்தது!
நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
கல்வி விருது
தவெக தலைவர் விஜய் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகள் இன்று விருது வழங்குகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இந்நிகழ்வு நடைபெற்று வருகின்றது. காலை முதல் மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை அளித்து வரும் விஜய், அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் அங்கு பல குழப்பங்கள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது. அதாவது, விழாவில் விதிப்படி கடந்த ஆண்டு போல அதிக நேரம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிகழ்வில் செல்ஃபோன் எடுத்துப் போக தடை விதிக்கப்பட்டது.
விழாவில் குழப்பம்
நிகழ்வுக்கு பாதுகாப்பிற்காக துபாயில் இருந்து செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் செக்யூரிட்டி மற்றும் தவெக நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.மேலும் மாணவர்கள், நிர்வாகிகள் எனத் தனித்தனியாக அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள்.
எந்த அடையாள அட்டை யாருக்கு எனப் புரியாமல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளையே அவர்கள் தடுத்து நிறுத்தியிருப்பதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.இந்த சூழலில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை,
அறுசுவை விருந்து, நிகழ்வில் இருந்து திரும்பி செல்லும் போது மரக்கன்றுகள் என நிறைய நல்ல விஷயங்கள் இருக்கும்போது இந்த குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.