அரசியல் கட்சிகளின் பொய்யான பிரச்சாரத்தை நம்பவேண்டாம் - விஜய் கோரிக்கை!
கல்வி விருது விழாவில் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் உரையாற்றினார்.
விஜய் கோரிக்கை
தவெக தலைவர் விஜய் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகள் இன்று விருது வழங்குகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய விஜய், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் , அவர்களுடன் பெருமையாக வந்திருக்கும் அவரது பெற்றோருக்கும்,
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க காரணமாக அமைந்துள்ள பொதுச்செயலாளர் ஆனந்துக்கும் , தமிழக வெற்றி கழகத்தினுடைய தோழர்களுக்கும், மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பர் நண்பிகளுக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
நம்பவேண்டாம்..
தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் தலைவர்கள் உருவாக வேண்டும் . நான்கு படித்தவர்கள் அரசியலை தங்களின் லட்சியமாக வைத்துக் கொள்ளும் காலம் வரவேண்டும்.
ஒரு சில அரசியல் காட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.
எல்லா துறையுமே நல்ல துறை தான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100 சதவீதம் உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம் .அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள் என்று உரையாற்றினார்.