ஜப்தியாகும் விஜயின் தந்தை அலுவலகம்!

Chandrasekhar Vijay Only Kollywood Chennai
By Sumathi Aug 02, 2022 04:21 AM GMT
Report

சட்டப்படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு காசை வழங்காததை அடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய காவல் துறை உதவி கோரப்பட்டுள்ளது.

 எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'சட்டப்படி குற்றம்' திரைபடத்தின் விளம்பர செலவு 76,122 ரூபாயை வழங்காததை அடுத்து,

ஜப்தியாகும் விஜயின் தந்தை அலுவலகம்! | Vijays Father Sa Chandrasekhars House Reciede

விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திரைப்படத்தை விளம்பரப்படுத்த சந்திரசேகருடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், ஒப்பந்தப்படி தொகையை வழங்கவில்லை என்றும் கூறி,

பொருட்கள் ஜப்தி

அதை வசூலித்து தரவேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை செலுத்த உத்தரவிட்டும், தொகையை வழங்காததால் உத்தரவை அமல்படுத்தக் கோரி சரவணன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஜப்தியாகும் விஜயின் தந்தை அலுவலகம்! | Vijays Father Sa Chandrasekhars House Reciede

இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சந்திரசேகருக்கு சொந்தமாக அலுவலக பொருட்களை ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்ற போது, சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்ய விடவில்லை எனக் கூறி, காவல் துறை உதவி உத்தரவு வழங்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.