சாதகமான விஜய் அரசியல் வருகை; மீண்டும் திமுகதான் - கருத்து கணிப்பில் தகவல்!
விஜய்யின் வருகை, திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என தெரியவந்துள்ளது.
விஜய்யின் வருகை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் அணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகளுடன் இந்த தேர்தலையும் சந்திக்கிறது.
அதே போன்று அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், பிரபல பத்திரிகை நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதில், நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு சாதனை
அதிமுக, பாஜக கூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீத வாக்குகளைப் பெற்ற திமுக கூட்டணி
தற்போது தேர்தல் நடைபெற்றால் 48 சதவீத வாக்குகளைப் பெறும். விஜய் திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்குகளை மட்டுமே பிரிப்பார்.
இது திமுக கூட்டணிக்கு சாதகமாகவே அமையும். மத்தியில் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.