முதல்வரை அங்கிள் என விஜய் அழைத்ததில் என்ன தப்பு? கே.எஸ்.ரவிக்குமார்
முதல்வரை அங்கிள் என விஜய் அழைத்ததில் தவறில்லை என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
முதல்வர் அங்கிள்
காஞ்சிபுரத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வரை அங்கிள் என விஜய் அழைத்ததில் தவறில்லை.
அங்கிள் என்பது தவறான வார்த்தை கிடையாது. நிஜமாகவே நேரில் பார்க்கும் போது குட் மார்னிங் அங்கிள்... எப்படி இருக்கீங்க? என்று தான் விஜய் கேட்பார்.
எங்களை போன்றோரை நேரில் பார்த்தால்கூட அங்கிள் என அழைப்பதைப் போல பப்ளிக்-ஆக கூறியுள்ளார். விஜய் எப்போதும் போல் அங்கிள் என அழைத்ததை வேற மீனிங்கில் எடுத்துக் கொண்டு வேறு மாதிரி ஒரு குரூப் பேசுகிறார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் ஆதரவு
இதை விட்டு விட்டு... நாட்டுக்கு என்ன நல்லதோ அதை செய்ய வேண்டும். விஜய் குறை சொல்லும் நோக்கத்தில் அங்கிள் என சொன்னதாக எனக்கு தோன்றவில்லை.
நானே கூட ரெட் ஜெயண்ட்ஸ்க்கு படம் செய்த காலத்தில்,அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் சாரை வீட்டில் சந்திக்கும்போது அங்கிள் என்றும், அவரது மனைவியை ஆண்ட்டி என்று அழைத்தேன்” என தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

விசாரணைக்கு கைக்கோர்த்து வந்த மாதம் ரங்கராஜ்.. பிரசவத்தை நெருங்கும் ஜாய் கிரிசில்டா- நேரில் சந்திப்பு! Manithan
