விஜய்தான் வருங்கால கமல்; அது ஒரு வெட்டி கழகம், திருமா கொத்தடிமை - விளாசிய பிரபலம்!
தவெக மாநாடு ரசிகர் மாநாடு என்று அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
தவெக மாநாடு
கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டும் அதை தமிழக அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க நாங்கள் விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறோம்.
அதிமுக பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியானது திமுகவை வீழ்த்த எண்ணம் உடைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணையும். தவெக அரசியல் கட்சி அல்ல, அரசியலில் திமுகவின் ஏ டீம் தமிழக வெற்றி கழகம்.
அர்ஜுன் சம்பத் கொந்தளிப்பு
தவெக மாநாடு அரசியல் மாநாடு இல்லை. ரசிகர்கள் மாநாடு ரசிகர்கள் பாவம், பவுன்சர்கள் தூக்கி வீசுகிறார்கள். ரசிகர்கள் மீது அக்கறை இல்லை, கருணையும் கிடையாது. எப்படி மாநாடு நடக்க கூடாது என்பதற்கு உதாரணம் இந்த மாநாடு.
சேர் உடைப்பதை கலாச்சாரமாக நினைக்கின்றனர். பிஜேபியை எதிர்க்க திமுக செய்யும் ஏற்பாடு அதற்கு உதாரணம் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், விஜய் வருங்கால கமல்ஹாசன் எனவும் அது தமிழக வெற்றி கழகம் அல்ல வெட்டி கழகம்.
பாமாகவில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சனை. திருமாவளவன் திமுகவின் கொத்தடிமை. தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மவுனம் காத்தனர். திமுகவில் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. தற்காலிக பணியாளர்கள் ஆசிரியர்கள் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்காதது ஏன்?
விசிக தான் அருந்ததி மக்களுக்கு துரோகம் செய்கிறது. அருந்ததியர் மக்களை ஆணவ கொலை செய்வது விடுதலை சிறுத்தை கட்சி என்று தெரிவித்துள்ளார்.