சமந்தாவை கட்டிப்பிடித்து கொஞ்சும் விஜய் தேவரகொண்டா - வைரலாகும் வீடியோ!

Samantha Vijay Deverakonda
By Vinothini May 13, 2023 09:52 AM GMT
Report

நடிகை சமந்தாவை கட்டிப்பிடித்தவாறு வீடியோ ஒன்றை நடிகர் விஜய் தேவரகொண்டா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா

தென்னிந்தியாவில் டாப் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

vijaydevarakonda-shares-video-with-samantha

இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்தார், பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

தற்பொழுது சமந்தா தனியாக வாழ்ந்து வருகிறார், சமீபத்தில் இவர் உடல்நலம் குன்றிய நிலையில் பல சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தார்.

அது சமூக வலைத்தளங்களில் பரவியது, மேலும், இவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

வைரல் வீடியோ

இந்நிலையில், சமந்தா ஷிவ நாராயணா எழுதி இயக்கியிருக்கும் குஷி படத்தில் நடித்திருக்கிறார், ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் அந்தப் படம் சமந்தாவுக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டிவருகின்றனர்.

இது செப்டம்பர் ஒன்றாம் தேதி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதன் முதல் சிங்கிளான ரோஜா நுவ்வே (தமிழில் என் ரோஜா நீயா) என்ற சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலானது முழுக்க இயற்கை சூழ் இடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அந்தப் பாடல் ஷூட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் பகிர்ந்திருக்கிறார், அது தற்போது வைரலாகி வருகிறது.