கணவருடன் இருந்த வீட்டை காலி செய்த சமந்தா - பல கோடியில் வாங்கிய புதிய பிரம்மாண்ட வீடு?
நடிகை சமந்தா ரூ.15 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியதாக தகவல் வெளியானது.
சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் கருத்து வேறுபாட்டு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
மணமுறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா முன்பு குடியிருந்த ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸ்ஸிலேயே வசித்துவருகிறார். ரூ.100 கோடி மதிப்புக்கொண்டதாகக் கூறப்படும் இந்த வீட்டை நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் சேர்ந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.
புதிய வீடு
சமந்தாவிடம் இந்த வீடு ஒப்படைக்கப்பட்டது என சொல்லப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7,944 சதுர அடியுடன் 13 ஆவது தளத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.