டெல்லிக்கு போன காரணமே வேற...விஜயதரணி பாஜகவில் இணைகிணறாரா..? செல்வப்பெருந்தகை
விஜயதரணி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளிவரும் நிலையில், அது குறித்து செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
விஜயதரணி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 முறை எம்.எல்.ஏ'வான விஜயதரணி விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
இது குறித்து அதிகாரப்பூரவ செய்தி ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், பாஜகவில் இணையவே விஜயதரணி டெல்லி சென்றுள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
அவர் சிக்கமாட்டார்
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது, பாஜக புள்ள பிடிக்கும் வேலையை செய்துவருகிறது என்றும் திறமையானவர்களை பிடிக்க பாஜக வலைவீசி வருவதாக கூறி, அவர்கள் வீசும் வலைக்கு தங்கள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி சிக்கமாட்டார் என்று உறுதிபட தெரிவித்தார்.
விஜயதரணி விவரமானவர் என்று கூறிய செல்வப்பெருந்தகை, உச்சநீதிமன்ற வழக்குக்காக அவர் 5 நாட்களாக புதுடெல்லியில் உள்ளார் என்றும் தெரிவித்து சென்றார்.