பலிக்காத எம்.பி கனவு - பாஜகவில் ஐக்கியமாகும் விஜயதரணி..அதிரும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் விஜயதரணி.
விஜயதரணி
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளவர் விஜயதரணி.
தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி வகித்து வருகிறார். வசந்த குமார் மறைவை அடுத்து கன்னியாகுமரியில் எம்.பி பதவிக்கு அவர் முயற்சித்ததாகவும், ஆனால் சீட் கிடைக்காததால், கட்சி தலைமை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தான் கடந்த சில நாட்களாக, விஜயதரணி பாஜகவில் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
டெல்லி சென்றுள்ள அவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜகவில் இணைகிறார் என்றும் அதன் காரணமாகவே தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகின்றது.