அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை - 15 மாஜி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் தஞ்சம்..!
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜகவில் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.
பாஜக - அதிமுக
கூட்டணி கட்சிகளாக இருந்த அதிமுக பாஜக தற்போது பெரும் எதிர்கட்சிகளாக மாறிவிட்டன. தொடர்ந்து பாஜகவை அதிமுகவினரும், அதிமுகவை பாஜகவினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தான் அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்து 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சி பக்கம் இழுத்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த பட்டியலில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரான கு.வடிவேலு, சேலஞ்சர் துரை, எம்.வி.ரத்தினம் என 15 பேர் பாஜக பக்கம் சென்றுள்ளனர்.
எம்.ஜி.ஆர் காலத்து அதிமுகவினர் இவர்கள் தற்போது கட்சியிலும், அரசியலிலும் பெரிதாக ஆக்ட்டிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.