நாங்க கதவை சாத்தித்டோம் - அமித் ஷா அழைப்பிற்கு ஜெயக்குமார் பதிலடி..!
கூட்டணி கட்சிகளுக்கு கூட்டணி கதவு திறந்து இருப்பதாக அமித் ஷா கூறிய நிலையில், அதற்கு அதிமுகவின் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அமித்ஷா அழைப்பு
இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அதிமுக தெரிவித்துள்ளனர். ஆனால், கூட்டணிக்காக பேச்சு வார்த்தையில் பாஜக அதிமுகவிடம ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
அண்மையில், ஜி.கே.வாசன் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு கூட இது தான் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டன. அதே தொடர்ந்து அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு பாஜகவின் கதவுகள் திறந்தே தான் இருக்கின்றன" என தெரிவித்தார்.
நாங்க கதவை சாத்தித்டோம்
இது அதிமுகவிற்கான அழைப்பு தான் பலரும் பேசி வரும் சூழலில், இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களின் சந்திப்பின் போது, இது குறித்து பேசிய அவர், பாஜக கூட்டணிக்கான கதவை திறந்து வைக்கட்டும், ஆனால் அதிமுக பாஜக கூட்டணிக்கான கதவை முழுவதுமாக சாத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்..