அதிமுகவுடன் கூட்டணி: பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கும் - அமித்ஷா அழைப்பு!
அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமித்ஷா
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
அதிமுகவுடன் கூட்டணி
அதிமுக கூட்டணி தொடர்பாகவும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். நாட்டில் யாரும் கட்சியை தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். அதே நேரத்தில் யாருக்கு வாக்குகள் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னமும் தயாராகிவில்லை.
நாட்டில் தமிழ்நாடும் மிக முக்கியமான மாநிலம். தமிழ்நாட்டுக்கான நிறைய திட்டங்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவோ தொடர்ந்து பாஜகவை விமர்சித்து கொண்டிருக்கும் நிலையில் அமித்ஷாவின் திடீர் அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.