காங்கிரஸுக்கு டாடா காட்டிய விஜயதரணி - பாஜகவில் தஞ்சம் - எம்.பி'யாகிறாரா..?
காங்கிரஸ் கட்சியின் 3 முறை எம்.எல்.ஏ'வான விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார்.
விஜயதரணி
காங்கிரஸின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி பாஜகவில் இணைவதாக தகவல் வெளிவந்ததில் இருந்தே தமிழக காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்தவர்கள் அதனை மறுத்து கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால், விஜயதரணி தரப்பில் எந்த வித கருத்தும் இது குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், இன்று டெல்லியில் இணையமைச்சர் ஏ.முருகன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
3 முறை தமிழகத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வான அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியது, காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு அவசியம் என்றும் பாஜகவில் இணைந்த பின் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் இருந்து எம்.பி'யாக வேண்டும் என்று விஜயதரணி விரும்பியதாகவும் ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சி தலைமை மறுப்பு தெரிவித்தால் அதிருப்தியில் விஜயதரணி இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.