பயப்படுபவர்களுக்கு RSS - உங்களுக்கு அது தான் சரி - வைரல் ராகுல் வீடியோ..!
விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
விஜயதரணி
காங்கிரஸ் கட்சியின் 3 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். எம்.பி சீட் காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்ட நிலையில், அவர் பாஜகவிற்கு மாறியதாக கருத்துக்கள் வெளிவருகின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தின் மறைவிற்கு பிறகு விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானதே காரணமாக கூறப்பட்டு வருகின்றது.
ராகுல் வீடியோ
இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், எதற்க்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது.
எதற்க்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 24, 2024
பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்.
- திரு @RahulGandhi pic.twitter.com/vKtwCx0EWu
பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தற்போது வெளியிட்டு விஜயதரணிக்கு பதிலளித்துள்ளது.