சீட் தராத பாஜக..காங்கிரஸ் கட்சியில் தஞ்சமடைந்த பிரபல ரஜினி பட நடிகை..!
நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெருபான்மை பெற்று ஆட்சியை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜயசாந்தி
ஆந்திர மொழியில் முதல் சூப்பர்ஸ்டார் நடிகையாக வளம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் படங்களில் நடித்துள்ள இவர், ஆந்திர மாநிலத்து அரசியலிலும் தீவிரம் காட்டினார்.
கடந்த 1998 முதல் 2005 வரை மற்றும் தற்போது 2020-ஆம் ஆண்டு முதல் பாஜகவில் பயணித்து வரும் விஜயசாந்தி, கடந்த 2009-ஆம் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ராஷ்ட்ர சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
காங்கிரஸ்ஸில் தஞ்சம்
தொடர்ந்து தீவிர அரசியலில் நீடித்து வரும் விஜயசாந்தி, சமீபத்தில் நடைபெற்று முடித்த சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால், அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
பாஜகவில் இருந்து விலகிய இவர் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஏற்கனவே விஜயசாந்தி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.