2 நாளுக்கு முன்னாடி கூட ...அப்பா இறப்பிற்கு முன் இது தான் நடந்தது ..? போட்டுடைத்த விஜயபிரபாகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
நினைவேந்தல் கூட்டம்
இந்த கூட்டத்தில், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, நாசர், விக்ரம், கார்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயம் ரவி, சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.செல்வமணி என திரைத்துறையை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நேற்று(19-01-2024) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் கலந்து கொண்டு தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் போது, “சிறு வயதில் இருந்தே தான் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட அப்பாவின் முகத்தை தான் நிறைய முறை பார்த்து வளர்ந்ததாக நெகிழ்ந்து, அப்பா என்றால் மிகவும் எமோஷனல் ஆகிவிடுவேன் என்றும் கேப்டன் எங்கேயும் போகாமல் நம்முடன் தான் இருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
2 நாட்கள் முன்பு கூட...
அவர் இறந்த பிறகு மீடியாவில் பேசுவது இதுவே முதல் முறை, அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான் என்று குறிப்பிட்டு, சிறு வயதில் இருந்தே அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ தான் அப்பா சொல்லி கொடுத்து இருக்கிறார் என்றார்.
அவரின் கனவை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என உறுதியாக கூறி, கடந்த 10 வருடமாக கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருந்தார் என்றும் வேறு யாராக இருந்தாலும் அதை தாங்கி இருப்பார்களா? என தெரியவில்லை என நினைவுகளை பகிர்ந்தார்.
71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்று இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் மன தைரியம் மட்டுமே காரணம் என சுட்டிக்காட்டி, பல யூடியூப் சேனல்களில் அப்பா இறப்பதற்கு முன்பு அவருக்கு நினைவு இல்லை என நிறைய தவறாக சொல்லப்பட்டது என்று தெரிவித்தார்.
அவர் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னர் கூட வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச படங்களின் பாட்டை போட சொல்லி கேட்டு ரசித்து இருக்கிறார் என்று எடுத்துரைத்த விஜயபிரபாகரன், சிசிடிவி பார்க்கும் போது தான், அப்பா அந்த பாட்டை கேட்டு ரசித்து தாளம் போட்டது தெரிந்தது என்றார்.
டிசம்பர் 26 ஆம் தேதி விஜயகாந்தை மருத்துமனையில் சேர்த்ததாக குறிப்பிட்டு, அப்பாவின் மறைவுக்கு வந்த அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் “ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.