MGR பாதி - விஜயகாந்த் மீதி - 2 மாத குழந்தைக்கு பெயர் வைத்த விஜயபிரபாகரன் - அதிர்ந்த மக்கள்

Vijayakanth ADMK DMDK Virudhunagar Premalatha Vijayakanth
By Karthick Apr 15, 2024 04:02 PM GMT
Report

தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார் விருதுநகர் மக்களவை வேட்பாளர் விஜயபிரபாகரன்.

விஜயபிரபாகரன்

மறைந்த தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

vijayaprabakaran-campaigining-for-elections

நட்சத்திர வேட்பாளர்களை இங்கு பாஜகவில் ராதிகா சரத்குமாரும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பெரும் சவாலான ஒன்றாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

குழந்தைக்கு.. 

பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜயபிரபாகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அப்போது அவருடன் ஒரு தம்பதி தங்களின் குழந்தையை கொடுத்து பெயர் வைக்கும் படி கேட்டபோது, குழந்தைக்கு விஜயராமச்சந்திரன் என பெயர் சூட்டினார் விஜயபிரபாகரன்.

விருதுநகரில் விஜயபிரபாகரன் - களம் கேப்டன் மகனுக்கு சாதகமாக உள்ளதா..?

விருதுநகரில் விஜயபிரபாகரன் - களம் கேப்டன் மகனுக்கு சாதகமாக உள்ளதா..?

தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், விஜயகாந்த் பிறந்தது ராமனுஜபுரம் தான் என்று குறிப்பிட்டு, நமக்கான பந்தம் விட்டுப் போகவில்லை என்று மக்களிடம் கூறினார். இரண்டு முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டி, இது என் சொந்த ஊர் நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்..? என்றும் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

vijayaprabakaran-campaigining-for-elections

மறைந்த விஜயகாந்த்தின் கனவை நினைவாக்கவே இப்பொறுப்பை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்து, அதற்காக முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.