Wednesday, May 14, 2025

ஓவரா டார்ச்சர் பண்ணாதீங்க; தற்கொலை செஞ்சுப்பேன் - நடிகை விஜயலட்சுமி பகீர் வீடியோ!

Vijayalakshmi Seeman
By Sumathi 2 years ago
Report

தற்கொலை செய்துகொள்வேன் என நடிகை விஜயலெட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.

நடிகை விஜயலெட்சுமி

சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். தொடர்ந்து எதிர்பார்க்காத வகையில் புகாரை வாபஸ் பெற்று பெங்களூருக்குத் திரும்பினார்.

ஓவரா டார்ச்சர் பண்ணாதீங்க; தற்கொலை செஞ்சுப்பேன் - நடிகை விஜயலட்சுமி பகீர் வீடியோ! | Vijayalakshmi Releases New Video On Seeman

இந்நிலையில், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளார். அதில், "அனைவருக்கும் நான் மற்றொரு விஷயத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த மார்ச் மாதம், மதுரை செல்வத்தை வைத்து சீமான் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்கொலை மிரட்டல்

அதில் மாசம் நான் 50 ஆயிரம் கொடுத்து விடுகிறேன். சென்னைக்கு வர வேண்டாம். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு வந்தால் போதும் என்றார். அதன்படி மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாதாமாதம் ரூ.50 ஆயிரம் போட்டார்கள்.

ஓவரா டார்ச்சர் பண்ணாதீங்க; தற்கொலை செஞ்சுப்பேன் - நடிகை விஜயலட்சுமி பகீர் வீடியோ! | Vijayalakshmi Releases New Video On Seeman

மதுரை செல்வத்திடம் கூட விசாரணை நடத்தவில்லை. போலீசாரும் அவர் குறித்து எங்கும் பேசவில்லை. சீமான் கூட மதுரை செல்வம் குறித்து எதுவும் பேசவில்லை. இப்போது என் மீது மனநஷ்டஈடு வழக்கு போவதாகச் சொல்கிறார்கள் நான் மன்னித்து விட்டபடி அனைவரும் விட்டுவிட்டால் ஓகே.

இப்போதும் அந்த வழக்கு போடுவேன். மனத்தை வாங்குவேன் என மிரட்டினால். எனது சகோதரி உயிரை முடித்துக் கொண்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன். இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதையும் எழுதி வைத்துவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.