சீமான் மாமா.. அழுதுட்டே இருக்கேன்; ரொம்ப அசிங்கமா இருக்கு - கதறிய நடிகை விஜயலட்சுமி

Vijayalakshmi Seeman
By Sumathi May 25, 2023 05:38 AM GMT
Report

 நடிகை விஜயலட்சுமி சீமான் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சீமான் மாமா..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அவ்வப்போது பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ ஒன்று படு வைரலாகி வருகிறது.

சீமான் மாமா.. அழுதுட்டே இருக்கேன்; ரொம்ப அசிங்கமா இருக்கு - கதறிய நடிகை விஜயலட்சுமி | Vijayalakshmi Called Seeman Mama Viral Video

அதில், "நான் நிம்மதியாக தூங்கி 12 வருஷம் ஆயிடுச்சு சீமான் மாமா. தினமும் நான் அழுதுட்டுதான் இருக்கேன். ரெண்டு வருஷமா நீங்க என் கூட வாழ்ந்த போது விதவிதமான கனவுகளை சொன்னீங்க. நம்பிக்கை கொடுத்தீங்க. ஆனா திடீர்னு என்னை பைத்தியம் ஆக்கிட்டு நடுத்தெருவுல விட்டுட்டு போய்ட்டீங்க.

விஜயலட்சுமி உருக்கம்

எனக்கு எப்போ நியாயம் கிடைக்கப் போகுதுனு எல்லோரும் கேக்குறாங்க. நான் உங்களை மாமானு கூப்டாதான் உங்களுக்கு தெரியும்.. நீங்க யாரை அழ வச்சுட்டு இருக்கீங்கனு. எத்தனை நாள்தான் நம்ம விஷயத்தை பொதுவெளில அசிங்கப்பட விடப் போறீங்க?

நான் அவமானப்படுறத எத்தனை நாள்தான் நீங்க பார்க்க போறீங்க சீமான் மாமா. எனக்கு பண உதவி பண்ணனும்னு தொனுச்சா பணம் கொடுங்க. என் கூட வாழ்ந்த மனசாட்சி உங்களுக்கு இருந்துச்சுனா எனக்கு உதவுங்க.

நான் வேண்டாம்னு சொல்லலையே. நம்ம விஷயத்தை நீங்க நினைச்சாதான் தீர்த்து வைக்க முடியும். எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு சீமான் மாமா" எனப் பேசியுள்ளார்.