மாட்டுக்கறி சாப்பிடுவோம்; இளையராஜாவுக்கே அந்த நிலைமை - சீமான் காட்டம்!
நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று சீமான் கூறியுள்ளார்.
அதிக ஏற்றுமதி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாகரீகம் அடைந்த நாடுகளில் முதன்மையான உணவு என்ன? பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான்.
இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்கிறது. நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன். நான் நகர்புறத்திற்கு வந்த பிறகு மாட்டுக்கறி எடுக்கிறேன். அது விலை குறைந்த உணவு. ஊட்டமான உணவு. உழைக்கும் மகக்ளுக்கு அதிகம் வலுவை சேர்க்கிற உணவு. இங்கே எல்லாரும் தான் சாப்பிடுகிறார்கள்.
சீமான் கொந்தளிப்பு
கேரளாவில் அனைவரும் சாப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் சாப்பிடுக்கிற உணவு என்று சொல்லக்கூடாது. பொருளாதார அளவு என்பது ஏற்றத்தாழ்வுக்குரியது.. மாறிக்கொள்ளக் கூடியது. இன்று நான் ஏழையாக இருக்கிறேன் என்றால் ஒரு 10 ஆண்டுகளில் அம்பானி அதானியாக மாற முடியும்.
ஆனால் இன்றைக்கு பறையானாக இருக்கிறவர் எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும் அந்த பறையன் தான். இளையராஜாவை விட புகழ்பெற்ற ஈடு இணையற்றை இசை மேதை இந்த நாட்டில் உண்டா? அவருக்கு ராஜ்யசபா பதவி கொடுக்கும் போது ஈடு இணையற்ற இசைக்கலைஞருக்கு கொடுத்தோம் என்று சொல்லவில்லை.
ஒரு தலித்திற்கு கொடுத்தோம் என்கிறீர்கள். இவ்வளவு உயரத்திற்கு வந்த பிறகும் சாதிய இழிவு ஒழியவில்லை என்றால் அதை எந்த செருப்பை வைத்து அடிப்பது... அப்போ நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.