உன்னை விட கேவலமா பேசுவேன் சீமான்; உன்னோட வாழ்ந்ததே கேவலம் - ஆவேசமான விஜயலட்சுமி
சீமானின் பேச்சுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சீமான் விஜயலட்சுமி வழக்கு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை 12 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறை அளித்த சம்மன் அடிப்படையில், நேற்று(28.02.2025) இரவு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகி, காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
6 மாதமே பழக்கம்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "விஜயலட்சுமியுடன் 6 மாதங்கள் மட்டுமே பழகினேன். அவர் என்னுடன் விரும்பிதான் உறவு வைத்துக்கொண்டார். பின்னர் பிடிக்கவில்லை என பிரிந்து சென்று விட்டார். எனக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆன பின்பும் என் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, "சீமான், 2023 ல் எதுக்கு நீ 50,000 போட்ட, உங்க புள்ளைங்க வளர்ந்துருச்சாம் எதுக்கு என்னிடம் வீடியோ வாங்கினீங்க. 2008 இல் இருந்து 6 மாதம் தான் பழகினேனா? அப்புறம் ஏன் 2011ல் வழக்கு தொடர்ந்தேன்.
எனக்கு தான் கேவலம்
2011ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் போட்ட துணியோட வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத.
நேற்று வரை என்ன சொல்லிட்டு இருந்த நடிகையை யார்னே தெரியாது. திமுக கூட்டிட்டு வந்ததுன்னு, நேற்று சொல்லுற ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு. மீடியா முன்னாடி சீன் போடாத. கேவலம் பிடிச்ச பொம்பளயாம். உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு, எனக்கு தான் கேவலம்" என பேசினார்.
பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள்(03.03.2025) விசாரணை வர உள்ளது.