சீமான் வழக்கு; விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Vijayalakshmi Chennai Seeman
By Swetha Mar 19, 2024 12:10 PM GMT
Report

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் வழக்கு

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

சீமான் வழக்கு; விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு! | Vijayalakshmi Is Scheduled To Appear On April 2

இந்நிலையில், ’2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர்.

ஆனால் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மோடி ரோடு ஷோ; கட்டாயப்படுத்தி வரவழைத்த மாணவர்கள் - கொந்தளித்த ஆர்வலர்கள்!

மோடி ரோடு ஷோ; கட்டாயப்படுத்தி வரவழைத்த மாணவர்கள் - கொந்தளித்த ஆர்வலர்கள்!

நீதிமன்றம் உத்தரவு

இது குறித்து, இந்த வழக்கின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இது மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ”ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சீமான் வழக்கு; விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு! | Vijayalakshmi Is Scheduled To Appear On April 2

அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை, இன்று ஆஜராகவும் இல்லை” என்று தெரிவித்தார். இதனையடுத்து, ”நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், விஜயலட்சுமி ஆஜராக மீண்டும் ஒரு அவகாசம் வழங்குவதாக தெரிவித்த அவர், விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்தார். அன்று, நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.