மோடி ரோடு ஷோ; கட்டாயப்படுத்தி வரவழைத்த மாணவர்கள் - கொந்தளித்த ஆர்வலர்கள்!

Coimbatore BJP Narendra Modi Viral Photos
By Swetha Mar 19, 2024 06:32 AM GMT
Report

பிரதமர் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க கட்டாயப்படுத்தபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி ரோடு ஷோ

மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மோடி ரோடு ஷோ; கட்டாயப்படுத்தி வரவழைத்த மாணவர்கள் - கொந்தளித்த ஆர்வலர்கள்! | Collector Orders Enquiry On Students In Modi Rally

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ரோடு ஷோ பேரணியில் கலந்து கொண்ட அவர் சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் பகுதி வரை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

இதில், சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு மலர்கள் தூவி மோடிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.எஸ்.புரம் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் படங்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

ஆசையாய் கேட்ட காதலன்; செய்ய மறுத்த காதலி! லிவ் -இன் இல் கொடூரம்!

ஆசையாய் கேட்ட காதலன்; செய்ய மறுத்த காதலி! லிவ் -இன் இல் கொடூரம்!

பள்ளி மாணவர்கள்

இதற்கிடையில், அந்த நிகழ்ச்சியில் சீருடையுடன் அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதியில் இது போன்ற பிரச்சாரக் கூட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

மோடி ரோடு ஷோ; கட்டாயப்படுத்தி வரவழைத்த மாணவர்கள் - கொந்தளித்த ஆர்வலர்கள்! | Collector Orders Enquiry On Students In Modi Rally

அதை பின்பற்றாமல் பேரணியில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீருடையுடன் இருக்கும் படங்களை வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மோடி ரோடு ஷோ; கட்டாயப்படுத்தி வரவழைத்த மாணவர்கள் - கொந்தளித்த ஆர்வலர்கள்! | Collector Orders Enquiry On Students In Modi Rally

இது குறித்து, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஆகியோர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

அதன் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனது எக்ஸ் பக்கத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.