ஆசையாய் கேட்ட காதலன்; செய்ய மறுத்த காதலி! லிவ் -இன் இல் கொடூரம்!
முட்டைக் குழம்பு சமைத்து தராததால், தனது லிவ்-இன் துணையை ஆண் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிவ் -இன்
டெல்லியை சேர்ந்த லல்லன் யாதவ் (35) என்பவர் ஏழு மாதங்களுக்கு முன் முன்பு அஞ்சலியை என்ற பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் பழகி வந்த நிலையில் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர்.
கூலி வேலை செய்து வந்த இருவரும் குர்காலனுக்கு வந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், வீடு இல்லாமல் அங்கேயே லிவ் -இன் யில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த வாரம் குடிபோதையில் இருந்த யாதவ், அஞ்சலியிடம் முட்டைக் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அஞ்சலி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொடூரம்
இதனால், ஆத்திரமடைந்த யாதவ், அஞ்சலியை இரும்பு கம்பி மற்றும் பெல்டால் அடித்து, கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதனையடுத்து, புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் 32 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
அதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலிஸார் ர் முகத்தில் காயங்களுடன் இருந்த சடலத்தை மீட்டு விசாரணையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த லல்லன் யாதவை கண்டுபுடித்து கைது செய்துள்ளனர்.