சாபம் சும்மா விடாது; இந்த ஜென்மத்துல அது நடக்காது - சீமானை விடாமல் அடிக்கும் விஜயலட்சுமி!
சீமானை விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார்.
சீமான் சர்ச்சை பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துகளால் தமிழகத்தில் பூகம்பமே வெடித்துள்ளது. பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சீமானை விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர்,
"மிஸ்டர் சீமான் பெரியார் யார் என்று உங்களுக்கு தெரியாதா? அப்படியா? பெரியார் யார் அவர் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தார் என பெரியாரிஸ்டுகள் வந்து சொல்லுவாங்க. தாய் தந்தையை குறிப்பிட்டு பேசியிருக்கிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே ஒரு தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் நீங்க சொல்லுங்க.
விளாசிய விஜயலட்சுமி
திராவிட மாடல் திருட்டு மாடலா? இப்போ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அந்த மைக்கை வச்சு பேசுங்க. நீங்க தான் எனக்கு மாசம் மாசம் பணம் கொடுத்தீங்க.ஆனா, என்னயவே தப்பா பேசுனீங்க. கண்டிப்பா ஒரு நாள் நான் ஜெயிப்பேனு நீங்க சொல்லிக்கிட்டே இருக்கீங்க.
அப்ப உங்கள எல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு சொல்றீங்க. கிடையவே கிடையாது. இந்த ஜென்மத்துல நீங்க ஜெயிக்க மாட்டீங்க. என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாது. இப்ப கூட நினைச்சுகிட்டு இருக்கீங்களா? தொண்டை வத்த வத்தக் கற்றினாலும் ஜெயிச்சிருவோம் என்று நினைத்தீர்களா? ஒன்றுமே கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.