நான் பாலியல் தொழிலாளியா? நீ நாசமா போவ - நடிகை விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ
என் கண்ணீர் உன்னை சும்மா விடாது என நடிகை விஜயலட்சுமி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சீமான்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள்.
அவள் ஒரு பாலியல் தொழிலாளி. ஆதாரம் நான் காட்டவா? அவளுக்கு மட்டுமே மனசு இருக்கா? அவ தான் பெண்ணா? அவளுக்கு தான் நீதியா? எங்க வீட்டுல பெண்கள் இல்லையா என் தாய், மனைவி, தங்கைகள் அவங்களுக்கு மனசு இல்லையா" என பேசினார்.
விஜயலட்சுமி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, " நான் என்ன பாலியல் தொழிலாளியாடா? நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் தவிச்சுட்டு இருக்கிறேன். இவ்வளவு நாள் நீ தப்பித்திருக்கலாம்.
அரசியலில் இருந்து மட்டுமல்ல, இந்த சமுகத்தில் இருந்தே அகற்றபட வேண்டிய மலம் சீமான்.#பாலியல்_பொறுக்கி_சீமான்
— #Dravidian _Algorithm (@Geosundar07) March 2, 2025
நீதிமன்றம் விஜயலட்சுமி அவர்களுக்கு நீதியை தருமென்று நம்புவோம்.#StandWithVijayalakhshmi@Manojku38000500@U2Brutus_off @Alien18R pic.twitter.com/b6fUgrCCZm
ஆனால் இனி எப்படி செருப்படி வாங்க போறேன்னு பாரு. பாலியல் தொழிலாளி என்றால் நான் ஏன் இப்படி தவித்துக் கொண்டிருக்கப் போகிறேன். நீ நாசமா போவ. என் கண்ணீர் உன்னை சும்மா விடாது" என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றத்தில், நாளை(03.03.2025) விசாரணை வர உள்ளது.