என்னை குற்றவாளி என சொல்ல நீங்கள் யார்? - சீமான் ஆவேசம்
விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான்
சென்னை விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள். நீங்கள் நீதிபதியா?
கம்யூனிஸ்ட்கள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உங்கள் கருத்து என்ன? அண்ணா பலகலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பம் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அதில் அரசு சம்பந்தப்பட்டது.
என்னை எதிர்கொள்ள முடியாமல், என்னைப் பார்த்து நடுங்குவதால் எனக்கு எதிராக சதி செய்கின்றனர். நாடெங்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்தபோது கனிமொழி வாய் திறந்தாரா?
கம்யூனிஸ்ட்கள் மாநிலத்தின் எந்த பிரச்சனைக்காவது குரல் கொடுத்தார்களா? தேசிய இனத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காதவன் எப்படி கம்ம்யூனிஸ்டாக இருக்க முடியும். கம்ம்யூனிஸ்டுகள் கார்ப்பரேட் முதலாளிகளாக மாறி விட்டார்கள்" என பேசினார்.