இன்று கேப்டனுக்கு பத்மபூஷன் விருது - தடபுடலாக நடைபெறும் ஏற்பாடுகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இன்று பத்மபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இன்று மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து கவுரவிக்கவுள்ளது. அதனை பெறுவதற்காக நேற்று டெல்லி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அதற்கு முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கேப்டனுக்கு நாளை டெல்லியில் பத்ம பூஷன் விருது தர உள்ளதால், இன்று டெல்லி செல்கிறோம் என்று குறிப்பிட்டு, நாளை மாலை 6.30 மணிக்கு மேல் இந்த விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
கேப்டன் கோயில் வரை
விருது பெற்ற பின்னர், டெல்லி தமிழ் சங்கம் சார்பாக 10ஆம் தேதி மாலை கேப்டனுக்கு பாராட்டு விழா நடக்க உள்ளதாக தகவல் தெரிவித்த பிரேமலதா,அந்நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருப்பதாக கூறினார்.
அந்நிகழ்ச்சி முடித்த பிறகு, 11-ஆம் தேதி சென்னை திரும்புவதாக குறிப்பிட்டு, சென்னை விமானநிலையத்தில் இருந்து கேப்டன் கோயில் வரை சென்று கேப்டனுக்கு விருதுகளை சமர்பிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
முன்னதாக, முன்னர் விருது வழங்கப்பட போது கேப்டன் பெயர் இடம் பெறாதது சலசலப்பை உண்டாக்கிய நிலையில், அது குறித்து பேசிய பிரேமலதா, விருது நிகழ்ச்சி 3 - 4 கட்டங்களாக நடவுள்ளதை சுட்டிக்காட்டினார்.