மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார்.
விரல் அகற்றம்
நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
பிரதமர் நலம் விசாரிப்பு
விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்ட சம்பவம் அவரது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்நிலையில் அவர் நலம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து இருந்தனர்.
அண்மையில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.விஜயகாந்த்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறித்துள்ளார்.
வீடு திரும்பினார்
இந்நிலையில் கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.