தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 3 கால் விரல்கள் அகற்றம் - ஷாக்கான ரசிகர்கள்
நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவரது குடும்பத்தினர் கவனித்துக் கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி
கடந்த வாரம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது.
3 கால் விரல்கள் அகற்றம்
இந்நிலையில், உடல்நலக் குறைவால் சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை மூலம் 3 கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டதை அறிந்த அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் வீடு திரும்ப வேண்டுமென தொண்டர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.