மறைந்தும் வாழ வைக்கும் கேப்டன் உலக சாதனை விருது பெற்ற விஜயகாந்தின் நினைவிடம்!!
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
கேப்டன் விஜயகாந்த்
நடிகர், கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர் என பல பரிணாமங்களில் மக்களுக்கு பரிட்சயமானவராக இருந்த விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே உடல் நல பாதிப்பால் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்தார்.
கடந்த வருடம் டிசம்பர் 28-ஆம் தேதி அவர் திடீரென இயற்கை எய்தினார். தமிழ்நாடே பெரும் சோகத்தில் மூழ்கியது. பெரும் திரளான மக்கள் அவரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு பிரியா விடைகொடுத்தனர். விஜயகாந்த் சாப்பாடு போடுவதிலும் தாராள மனம் படைத்தவர்கவே இருந்தார். அதற்காகவே திரையுலகில் அவருக்கு தனி புகழ் உள்ளது.
கட்சி துவங்கிய நிலையில், கட்சி அலுவலகத்தில் பலருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர் கேப்டன். அவர் மறைந்த பிறகு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரின் கட்சி அலுவலகம் அவரின் நினைவிடமாக மாறியது.
உலக சாதனை விருது
அந்நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அனைவருக்குமே தினமும் உணவு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்படுவதாக தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Lincoln Book of Records) சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 125 நாட்களாக விஜயகாந்தின் நினைவிடத்தில் இதுவரை வருகை தந்த 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி இருக்கிறர்கள். அதே போல வருகை தந்த பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக இது போற்றப்படுகிறது.