விஜயகாந்த் நலமுடன் உள்ளார்- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகனின் பதிவு!!

Vijayakanth
By Karthick Dec 03, 2023 01:38 AM GMT
Report

கடந்த 18-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

விஜயகாந்த்


சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். உடல் நிலை கோளாறு ஏற்பட அவர் கொஞ்சம் கொஞ்சமாக நேரடி களத்தில் இருந்து ஒதுங்க, தேமுதிகவும் ஓட்டு அரசியலில் பின்தங்கி இருக்கின்றது.

vijayakanth-is-fine-photo-shares-son-through-fb

நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சனை உள்ள விஜயகாந்த் கடந்த 18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அவரை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை, அவருக்கு அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்றும், அதன் பிறகு விஜயாகாந்த் வீடு திரும்புவார் என குறிப்பிட்டனர்.

விஜயகாந்த் திரும்ப வருவார் - வதந்திகளை பரப்பாதீர்கள் - நாசர் !!

விஜயகாந்த் திரும்ப வருவார் - வதந்திகளை பரப்பாதீர்கள் - நாசர் !!

அதனை தொடர்ந்து தான் பல சந்தேகத்திற்கு செய்திகள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாக துவங்கின. அதனை தெளிவுப்படுத்த பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தான் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சண்முக பாண்டியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், ‘கேப்டன் நன்றாக இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார், வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனத் தெரிவித்து, தனது தந்தை நலமுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.