தமிழர் நலனில் தனி அக்கறை...வாழ்நாள் முழுவதும் போராடிய கேப்டன்..!

Vijayakanth Vijayakanth Tamil nadu
By Karthick Dec 29, 2023 03:28 AM GMT
Report

தேமுதிக தலைவராகவதற்கு முன்பே நடிகராக இருந்த நேரத்தில் இருந்தே விஜயகாந்த் தமிழர் நலனில் மிகுந்த அக்கறையுடனே இருந்து வந்தார்.

ஈழ தமிழர் நலனில்..

80-களில் நாயகனாக விஜயகாந்த் அதற்கு முன்பாக சிறுவயதில் இருந்தே தமிழ் - தமிழர் என தனி ஆர்வமும் கொண்டிருந்தார். சிறுவயதில் மதுரையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவை அவரின் மனதில் ஆழ பதிந்துள்ளன எனலாம்.

vijayakanth-in-tamil-people-welfare

படங்களில் கிடைத்து, தனக்கென தனி பாதையை உருவாக்கி கொண்டிருக்கும் வேலையிலேயே, இலங்கையில் தமிழர் படுகொலை அதிகரித்த போது, சென்னையில் நடிகர் நடிகைகளை திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியவர் விஜயகாந்த்.

vijayakanth-in-tamil-people-welfare

பிரபாகரன் மீதான தனிப்பட்ட ஈடுபாட்டால், தனது 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்று பெயர் வைத்தது மட்டுமின்றி, தனது மகனுக்கும் விஜய பிரபாகரன் என்றே பெயர்வைத்தவர் கேப்டன்.

கச்சத்தீவு மீட்பிலும் தனி ஆர்வத்துடன் ஈடுபட்ட கேப்டன், 2013ல் கச்சத் தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த போது, இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூக்குரலிட்டார்.

காவிரி பிரச்சனையில்

அதே போல காவிரி பிரச்சனை வரும் போதெல்லாம் உடனே களத்தில் இறங்கியவர் விஜயகாந்த்.

கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி - முகம் முழுக்க சோகத்துடன் விஜய்..!!

கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி - முகம் முழுக்க சோகத்துடன் விஜய்..!!

2002-ஆம் ஆண்டு நெய்வேலியில், நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை என்ற முழக்கத்துடன் நடிகர் சங்கத்தினரை ஒன்றுதிரட்டி விஜயகாந்த் முன்னின்று நடத்திய போராட்டம் தான் இன்றளவும் பேசப்படுகிறது.

vijayakanth-in-tamil-people-welfare

அதே போல, 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் வெடித்த நிலையில், அங்குள்ள தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அப்போதைய ஆளும் அதிமுக அரசு போராட்டத்தை தடுக்க மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் கொடுக்கவில்லை என கண்டித்து உண்ணாவிரத போராட்டத்திலும் குதித்தவர் நமது கேப்டன்.