கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி - முகம் முழுக்க சோகத்துடன் விஜய்..!!
தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு நடிகர் விஜய் நேரில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
விஜயகாந்த் - விஜய்
நீண்ட காலமாக நடிகர் விஜய் மீது தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன.
அவருக்கு சினிமாவில் பெரும் உதவியை செய்த விஜயகாந்த் உடல் நலம் குன்றி இருக்கும் போது அவரை ஒருமுறை கூட விஜய் நேரில் சந்திக்கவில்லை என தொடர் குற்றச்சாட்டுக்கள் விஜய் மீது அடுத்தடுத்து வைக்கப்பட்டது.
நேற்று விஜயகாந்த் மரணமடைந்த நிலையில், வெளிநாட்டில் இருக்கும் விஜய் நேரில் வருவாரா..? என்றெல்லாம் பலரும் கேள்விகள் எழுப்பினர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு தனது கடைசி அஞ்சலியை நேரில் வந்து செலுத்தினார் விஜய்.
மிகவும் சோகமாக காணப்பட்ட விஜய்யின் வேதனை அவரின் கண்களில் தெரிந்ததை நம்மால் காண முடிந்தது.