கேப்டனுக்கு மெரினாவில இடம் கொடுத்தே ஆகணும் - ஆவேசத்துடன் தொண்டர்கள்..!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மெரினா கடற்கரையில் இடம் கொடுக்கவேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவு
இன்று காலை 6:15 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் சாந்திக்காக வைக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அவரின் உடல் நாளை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யவுள்ளனர்.
மெரினாவில் இடம்
ஆனால், துயர செய்தி வெளியானதில் இருந்து அவரின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடமளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.இது குறித்து தொண்டர்கள் மனமுறுகி பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
ஆனால், அதிகாரபூர்வமாகவே கட்சி தரப்பில் அவரின் நல்லடக்கம் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் தான் நடைபெறும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.