விஜயகாந்த் மரணம் - அண்ணாநகர் முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து மாற்றம்..!
Vijayakanth
Chennai
DMDK
By Karthick
2 years ago
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணமடைந்துள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றம் நடைபெற்றுள்ளது.
விஜயகாந்த் மரணம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை நுரையீரல் பாதிப்பினால் மரணமடைந்துள்ளார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை தான் அவரின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகத்தில் பெரும் திரளான மக்கள் கூடியுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
சென்னை கோயம்பேடு மேம்பாலம் பெரும் போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தற்போது போக்குவரத்து மாற்றம் நடைபெற்றுள்ளது.
அதாவது சென்னை கோயம்பேடு முதல் அண்ணாநகர் வரையில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.