பத்மபூஷன் வாங்கியவுடன் பிரேமலதா கொடுத்த ரியாக்ஷன்!! நெகிழ்ந்த ஜனாதிபதி
நேற்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பத்மபூஷன்
மறைந்த நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது மத்திய அரசால் அளித்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
அவரின் சார்பில் அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருதை பெற்றுக்கொண்டார். நேற்று முன்தினமே டெல்லி சென்ற பிரேமலதாவுடன் அவரது தம்பி சுதீஷ் மற்றும் மகன் விஜயபிரபாகரன் ஆகியோரும் டெல்லி சென்றனர்.
நெகிழ்ந்த...
விருதினை நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரேமலதாவிடம் அளித்த நிலையில், அதனை மரியாதையுடன் வாங்கி கொண்ட பிரேமலதா, உடனே தனது தலையை உயர்த்தி மேலே பார்த்து சற்று நெகிழ்ந்தார்.
அவருக்கு அரங்கில் இருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். முன்னதாக நடிகர் சத்யராஜ், பிரபு ஆகியோர் விஜயகாந்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
இன்று டெல்லி தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரேமலதா, நாளை சென்னை வந்தடைந்து விருதினை விஜயகாந்தின் கல்லறையில் சமர்பிக்கவுள்ளார்.