விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - மகன் பரபரப்பு தகவல்!
விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மகன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவுதான் ஆனால் கேப்டன் நன்றாக உள்ளார்.
அவர் நூறு வயசு வரை நன்றாக இருப்பார். ஆனால் பழையபடி பேசுவாரா? நடப்பாரா என்றால் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். கேப்டன் தாரக மந்திரமே முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம் என்று சொல்வார் அதன் அடிப்படையில்தான் கட்சியை நடத்தி வருகிறோம். எங்கள் அம்மா ரசிகர் மன்ற காலத்தில் இருந்து கேப்டனுக்கு துணையாக இருந்துள்ளார்.
மகன் பேட்டி
என் கனவை கூட ஒதுக்கி வைத்து தொண்டர்கள் அழைத்ததற்காக நான் வந்துள்ளேன். அதிமுக மாநாடு ஒன்றும் புதிது அல்ல; ஏற்கெனவே அவர்கள் கட்சியில் நிறைய குழப்பம் உள்ளதால் அவர்களுக்குள்ளேயே போட்டிப்போட்டு நடத்தும் ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். தேமுதிக மட்டுமல்ல, பல கட்சியில் இருந்து பலர் கட்சி மாறி கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு செந்தில் பாலாஜியும் ஒரு எடுத்துக் காட்டு, அதிமுக காலத்தில் செய்த தவறுக்காக திமுகவில் இருந்த போது சிறை சென்றுள்ளார். கேப்டனுக்காக விசுவாசமாக இருப்பவர்கள் எங்கள் கட்சியில் தொடர்ந்து உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை கேப்டன் உரிய நேரத்தில் முடிவெடுப்பார்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு உள்ளது. இதனை எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்யாமல் சரியான விஷங்களை மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். நம்மை விட பின் தங்கி உள்ள மாநிலத்தில் கூட இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.