விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்.. செல்வப்பெருந்தகை

Vijay Tamil nadu Chiranjeevi K. Selvaperunthagai
By Sumathi Aug 26, 2025 05:04 AM GMT
Report

விஜயகாந்தின் நிலைதான் விஜய்க்கும் ஏற்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

விஜய் நிலை

கடலூரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

selvaperunthagai - vijay

“தமிழ்நாட்டு மக்களுக்கு எது நன்மையோ, அதைத்தான் காங்கிரஸ் செய்யும். தற்போது இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. 50% மேல் வாக்குகள் பெறக்கூடிய ஒரே கூட்டணி; இந்தியா கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

அதனால் எங்கள் கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 100% வாக்குகள் பெறும். பாஜக- அதிமுக கூட்டணிக்கு ஒரு வாக்குகூட கிடைக்காது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக பறித்து வருகிறது.

தமிழகத்தின் வரலாறு, கலாச்சாரம், கீழடி அகழ்வாராய்ச்சிகள் உள்ளிட்டவற்றை பாஜக மாற்றி அமைக்க எழுத கூறுகிறது. அதை சீரழிக்க வேண்டிய நடவடிக்கைகளை பாஜக செய்து வருகிறது. இது தமிழர்களுக்கு விரோதமான செயல்.

விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - விஷால்

விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - விஷால்

செல்வப்பெருந்தகை ஆவேசம்

பீகாரில் பாஜகவுக்கு எதிராக தற்போது எழுச்சி அலை ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு பீகாரில் தோல்வி பயம் வந்துவிட்டது, ஏனெனில் அங்கு பலரும் ராகுல் காந்தியை பின்தொடர்கிறார்கள். தவெக தலைவர் விஜய், குறைந்தப்பட்சம் மேடையில் நாகரீகமாக பேசவெண்டும்.

விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்.. செல்வப்பெருந்தகை | Vijayakanth Chiranjeevi Situaition Happen To Vijay

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து கணிசமான வாக்குகள் பெற்றார். 10 % மேல் வாக்குகள் பெற்ற அந்தக் கட்சி, தற்போது என்ன நிலையில் இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி கூட்டிய மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

கடைசியில் காங்கிரஸ் கூட கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். தற்போது அந்தக் கட்சியே இல்லை. அதுபோன்று பல கட்சிகள் வரும், காணாமல் போகும். காங்கிரஸ் நிலைத்து நிற்பதற்கு காரணம் சித்தாந்தம் வலிமையாக இருக்கதே ஆகும்.

யானை பலம் உள்ள ஒரு கட்சி காங்கிரஸ். நாங்கள் யாரையும் கொச்சைப்படுத்தி பேச மாட்டோம். எங்கள் கொள்கை எதிரியான பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க இருந்தாலும் நாகரீகமாத்தான் அவர்களை விமர்சிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.