அண்ணாமலை கொடுத்த பதக்கம்; வாங்க மறுத்த டிஆர்பி ராஜா மகன் - சலசலப்பு!
டி.ஆர்.பி. ராஜா மகன் அண்ணாமலை கையில் இருந்து பதக்கம் அணிய மறுப்பு தெரிவித்துள்ளது.
டி.ஆர்.பி. ராஜா மகன் மறுப்பு
புதுக்கோட்டை பகுதியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் முக்கிய விருந்தினராக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அண்ணாமலை மேடையில் அமர்ந்து, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கி கொண்டிருந்தார்.
பரவும் வீடியோ
அப்போது திமுக எம்.எல்.ஏ TRB ராஜாவின் மகன் மேடைக்கு வந்தார். வழக்கம்போல அண்ணாமலை அவர் கைகளில் பதக்கத்தை கொடுக்க முயன்றார்.
https://www.facebook.com/watch/?v=1531651697819595
ஆனால், அவர் பதக்கம் வாங்க மறுத்து, மேஜையில் வைக்கப்பட்டிருந்த பதக்கத்தை நேரடியாக தனது கைகளில் எடுத்து அணிந்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. TRB ராஜா திமுகவின் முக்கிய தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலுவின் மகனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.