விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - விஷால்
விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் சிறப்பாக இருந்திருக்கும் என விஷால் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல் களம்
உதகையில் நடிகர் விஷால் நடிக்கும் மகுடம் படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
“அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாடு நடத்தியிருக்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள். நல்லது பண்றதுதான் அரசியல்னா, எப்பவோ நான் அரசியலுக்கு வந்துட்டேன்.
விஷால் புகழாரம்
அரசியல் கொடிகளில் பல நிறங்கள் தான் தெரிகிறது. நிறைய கொடிகளை பார்க்கும்போது, கலர்ஃபுல்லா வேடிக்கை இருக்கிறது.
ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் சிறப்பாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, படப்பிடிப்பு தளத்தில், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.