விஜயகாந்த் உடல்நிலை; நான் அப்படி சொல்லவேயில்லை - மகன் வேதனை!

Vijayakanth
By Sumathi Aug 23, 2023 04:01 AM GMT
Report

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பரப்பி வருவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவுதான் ஆனால் கேப்டன் நன்றாக உள்ளார். அவர் நூறு வயசு வரை நன்றாக இருப்பார்.\

விஜயகாந்த் உடல்நிலை; நான் அப்படி சொல்லவேயில்லை - மகன் வேதனை! | Vijaya Prabhakaran Clarifies Vijayakanths Health

ஆனால் பழையபடி பேசுவாரா? நடப்பாரா என்றால் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். கேப்டன் தாரக மந்திரமே முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம் என்று சொல்வார் அதன் அடிப்படையில்தான் கட்சியை நடத்தி வருகிறோம் எனப் பேசியிருந்தார்.

மகன் விளக்கம் 

இந்நிலையில், தனது பேட்டி குறித்து விஜயபிரபாகரன் ட்விட்டர் பக்கத்தில், கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்.

வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது. இணைப்பை திறந்து நான் பேசியதை பாருங்கள் அப்போது புரியும் நன்றி கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்.

வழக்கம் போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடலாம் எனத் தெரிவித்துள்ளார்.